கரும்பு பாரத்துடன் கிணற்றில் விழுந்த லாரி மீட்பு


கரும்பு பாரத்துடன் கிணற்றில் விழுந்த லாரி  மீட்பு
x
தினத்தந்தி 15 March 2022 2:02 AM IST (Updated: 15 March 2022 2:02 AM IST)
t-max-icont-min-icon

கரும்பு பாரத்துடன் கிணற்றில் விழுந்த லாரி மீட்கப்பட்டது.

கவுந்தப்பாடி அருகே உள்ள பெரிய புலியூர் தயிர்பாளையத்தில் ஒரு தோட்டத்தில் அறுவடை செய்த கரும்புகள் ஆலைக்கு கொண்டு செல்வதற்காக நேற்று முன்தினம் லாரியில் ஏற்றப்பட்டது. பின்னர் அங்கிருந்து லாரி புறப்பட்டது. அப்போது பாரம் அதிகமாக இருந்ததால் தோட்டத்தில் இருந்த கிணற்றுக்குள் லாரி சாய்ந்தது. உடனே டிரைவர் லாரியில் இருந்து வெளியே குதித்து உயிர் தப்பினார். சில நிமிடங்களில் லாரி முழுவதும் 60 அடி ஆழ கிணற்றுக்குள் மூழ்கிவிட்டது. சமூக வலைதளங்களில் இந்த காட்சி பெரும் வைரலாகியது. 
இந்தநிலையில் நேற்று ஈரோட்டில் இருந்து மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டது. பின்னர் கிணற்றில் இருந்த லாரி மீட்கப்பட்டது. இதை வேடிக்கை பார்ப்பதற்காக அந்த பகுதி மக்கள் அங்கு திரண்டுவிட்டார்கள். 

Related Tags :
Next Story