ஆதிகைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம்
ஆதிகைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
ஆவுடையார்கோவில்
திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஆவுடையார்கோவில் வடகர் சிவகாமசுந்தரி அம்பாள் சமேத ஆதிகைலாசநாதர் கோவில் புதுப்பிக்கப்பட்டு திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகாசன்னிதானம் அம்பலவாணதேசிக பரமாச்சாரியார் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக குடங்களில் புனிதநீர் நிரப்பப்பட்டு சிவாச்சாரியார்களால் 6 கால பூஜைகள் மற்றும் பூர்ணாகுதி, தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர், பூஜையில் வைக்கப்பட்ட கடங்களை மேளதாளங்கள் முழங்க கோவிலை சுற்றி எடுத்து வந்து கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தில் திருவாவடுதுறை ஆதீனம் தென்மண்டல மேலாளர் முத்துக்கிருஷ்ணன், அறந்தாங்கி ஆர்.டி.ஓ.சொர்ணராஜ் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள், கோவில் நிர்வாகிகள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் செந்தில்குமரன், ராஜேஸ்வரி நரேந்திரஜோதி, பாலசுந்தரி கூத்தையா, ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா ராஜமாணிக்கம் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பணியில் ஆவுடையார்கோவில் போலீசார் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story