சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவத்தில் தனியார் விடுதி உரிமையாளர் கைது
சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவத்தில் தனியார் விடுதி உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
ஜெயங்கொண்டம்:
குளிர்பானத்தில் மயக்க மருந்து
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியை சேர்ந்த சாந்தா (வயது 30) என்பவர், 15 வயது சிறுமி ஒருவரை வீட்டு வேலைக்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அழைத்து சென்றுள்ளார். பின்னர் அந்த சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், பெற்றோரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட சிறுமியை பரிசோதித்த டாக்டர், சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில், சிறுமியை அழைத்துச்சென்ற சாந்தா, அவரை கீழப்பழூவூரை சேர்ந்த சந்திராவிடம்(30) ஒப்படைத்ததும், இதைத்தொடர்ந்து சந்திரா அந்த சிறுமியை கீழப்பழுவூர், வி.கைகாட்டி, செந்துறை மற்றும் தஞ்சாவூர் பகுதிகளுக்கு அழைத்துச்சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும், இதற்கு சாந்தா உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சாந்தா, சந்திரா மற்றும் தஞ்சை கீழவாசலை சேர்ந்த வினோத்(29), வி.கைகாட்டி பகுதியை சேர்ந்த பிரேம்(29), நாகமங்கலத்தை சேர்ந்த பாலச்சந்தர்(27), செந்துறை பகுதியை சேர்ந்த தங்கும் விடுதி மேலாளர் தனவேல்(58), கீழப்பழுவூரை சேர்ந்த வெற்றிக்கண்ணன்(37), திருமானூரை சேர்ந்த தெய்வீகன் (49), கீழப்பழுவூரை சேர்ந்த ராஜேந்திரன்(62) ஆகிய 9 பேரை கடந்த 6-ந் தேதி போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வந்தனர்.
தனியார் விடுதி உரிமையாளர்
ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைகதிரவன், துணை சூப்பிரண்டு (பயிற்சி) சங்கர் கணேஷ் ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர் சுமதி, உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் உள்ளிட்ட போலீசார் இச்சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்று விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த சிறுமியை சில நாட்கள் அமிர்தராயன்கோட்டை கிராமத்தை சேர்ந்த இந்திரா என்பவரது வீட்டில் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 8-ந் தேதி இந்திரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அரியலூர்- செந்துறை ரோட்டில் உள்ள தனியார் விடுதி உரிமையாளரான செந்துறை சித்துடையார் கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்த கண்ணன் என்ற கந்தசாமியை(45) போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story