குடிசை வீட்டில் தீ விபத்து; பஞ்சு மூட்டை- பொருட்கள் எரிந்து நாசம்
திங்களூர் அருகே குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பஞ்சு மூட்டை மற்றும் பொருட்கள் எரிந்து நாசம் ஆனது.
திங்களூர் அருகே குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பஞ்சு மூட்டை மற்றும் பொருட்கள் எரிந்து நாசம் ஆனது.
விவசாயி
கோபியை அடுத்த திங்களூர் அருகே உள்ள பொன்னாங்காட்டு புதூரை சேர்ந்தவர் சண்முகம் என்கிற சந்திரசேகர். விவசாயி. இவருடைய மனைவி தனலட்சுமி. சண்முகமும், தனலட்சுமியும் ஓலை குடிசை வீட்டில் வசித்து வருகிறார்கள்.
நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் 2 பேரும் சாப்பிட்டு விட்டு டீ போட்டு குடித்தனர். அப்போது அவர்கள் விறகு அடுப்பை அணைக்காமல் விட்டு விட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் படுத்து தூங்கினர். இரவு 9.30 மணி அளவில் வீட்டில் இருந்து திடீரென கரும்புகை வந்தது.
எரிந்து நாசம்
இதைத்தொடர்ந்து தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதை கண்டதும் தூங்கி கொண்டிருந்தவர்கள் வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்து விட்டனர். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த 5 பஞ்சு மூட்டைகள், 2 சிப்பம் அரிசி, ரூ.2 ஆயிரம், பாத்திரங்கள், துணிகள் உள்பட பல்வேறு பொருட்கள் எரிந்து நாசம் ஆனது.
இதுபற்றி திங்களூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story