சரியாக செயல்படாத மந்திரிகள் மீது பசவராஜ் பொம்மை கவனம் செலுத்த வேண்டும்; சி.டி.ரவி எம்.எல்.ஏ. பேட்டி
சரியாக செயல்படாத மந்திரிகள் மீது பசவராஜ் பொம்மை கவனம் செலுத்த வேண்டும் சி.டி.ரவி எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி எம்.எல்.ஏ. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
சரியாக பணியாற்றாத மந்திரிகள் மீது முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கவனம் செலுத்த வேண்டும். காலியாக உள்ள வாரியங்களுக்கு தலைவர்கள் நியமன பணிகள் தாமதமாகி வருவதால் கட்சி நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். கட்சிக்காக எந்தவித பங்களிப்பையும் வழங்காதவர்களை வாரிய தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.
எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவுக்கு கட்சியின் மாநில துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது ஒன்றும் சிறிய பதவி அல்ல. இதை சிறிய பதவி என்று சொல்பவர்களை என்னவென்று சொல்வது என தெரியவில்லை. பா.ஜனதாவின் உயர்நிலை கவுன்சில் கூட்டம் நடந்த பிறகு கோவா பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும். கோவாவில் ஹோலி பண்டிகைக்கு பிறகு புதிய ஆட்சி அமைக்கப்படும்.
இவ்வாறு சி.டி.ரவி கூறினார்.
Related Tags :
Next Story