மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மீன்சுருட்டி:
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள ஆற்காடு முள்ளுக்குடி தெருவை சேர்ந்த சந்திரகாசுவின் மனைவி கஸ்தூரி (வயது 46). இவர்களுக்கு அருண்குமார்(19) என்ற ஒரு மகனும், ஒரு மகளும் உண்டு. சந்திரகாசு ஏற்கனவே இறந்துவிட்டநிலையில் அருண்குமாரை, மீன்சுருட்டி அருகே சலுப்பை கிராமத்தில் உள்ள தனது அக்காள் உமாராணி வீட்டில் கஸ்தூரி தங்க வைத்து, அங்கு 6-ம் வகுப்பு முதல் படிக்க வைத்ததாக தெரிகிறது. இந்நிலையில் தற்போது அருண்குமார் ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ படிப்பு படித்து வந்ததாக தெரிகிறது. மேலும் அவர் அடிக்கடி செல்போனில் விளையாடிக் கொண்டிருந்ததை, கஸ்தூரி கண்டித்துள்ளார். இந்நிலையில் குளத்திற்கு குளிக்க செல்வதாக கூறி சென்ற அருண்குமார் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இந்நிலையில் அந்தப் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் அருண்குமார் தூக்கில் பிணமாக தொங்கியது தெரியவந்தது. இதுகுறித்து கஸ்தூரி கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story