டாக்டர்கள் ஆலோசனையின்றி மாத்திரைகள் வழங்குவதை மருந்து வணிகர்கள் தவிர்க்க அறிவுறுத்தல்


டாக்டர்கள் ஆலோசனையின்றி மாத்திரைகள் வழங்குவதை மருந்து வணிகர்கள் தவிர்க்க அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 15 March 2022 3:11 AM IST (Updated: 15 March 2022 3:11 AM IST)
t-max-icont-min-icon

டாக்டர்கள் ஆலோசனையின்றி மாத்திரைகள் வழங்குவதை மருந்து வணிகர்கள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் முழுவதும் உள்ள மருந்து வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம், மருந்து வணிகர் சங்க மாவட்ட தலைவர் கருணாகரன் தலைமையில் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் ஸ்ரீதேவி, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை டாக்டர் இளவரசன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். சிறப்பு விருந்தினராக மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை துணை இயக்குனர் டாக்டர் குருநாதன் கந்தையா கலந்து கொண்டு மருந்து வணிகர்களுக்கு அறிவுரை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
கூட்டத்தில், டாக்டர்களின் ஆலோசனை இல்லாமல் மருந்துகள், மாத்திரைகள் வழங்குவதை மருந்து வணிகர்கள் தவிர்க்க வேண்டும். அடிக்கடி கருக்கலைப்பு மற்றும் சிறுவயது கருக்கலைப்பு உள்ளிட்ட செயல்களால் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையில் டாக்டரின் பரிந்துரை சீட்டின் பெயரிலேயே மருந்துகள் வழங்க வேண்டும். சிறு வயதில் கர்ப்பம், குழந்தை திருமணம் போன்றவற்றை தவிர்க்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் வழங்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கூட்டத்தில் செயலாளர் சங்கர், பொருளாளர் கார்த்திகேயன், மொத்த மருந்து வணிகர்கள் சங்க தலைவர் முருகன், சில்லறை மருந்து வணிகர்கள் சங்க தலைவர் அசோக்குமார் மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மருந்து வணிகர்கள் மற்றும் மருந்து வணிகர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர். முடிவில் மருந்து வணிகர் சங்க மக்கள் தொடர்பு அலுவலர் விஜயகுமார் நன்றி கூறினார்.

Next Story