ரெயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ரெயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தாமரைக்குளம்:
அரியலூர் ரெயில் நிலையத்தில் அமைந்துள்ள கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு எஸ்.ஆர்.எம்.யு. சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு அச்சங்கத்தின் கிளைத் தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். பொருளாளர் கார்த்தி முன்னிலை வகித்தார். கிளை செயலாளர் செல்வகுமார் பேசினார். புதிய ஓய்வூதிய திட்டத்தில் பணி ஓய்விற்குப் பின்னர் பல குடும்பங்கள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே ழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் வரை போராட்டங்கள் தொடரும். அதற்கு அரசு வாய்ப்பளிக்காமல் பழைய ஓய்வு திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்கத்தை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story