அடகு கடையில் இருந்து நகைகளை மீட்டு தரக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு
அடகு கடையில் இருந்து நகைகளை மீட்டு தரக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, கொளக்காநத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்களில் சிலர் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு திரண்டு வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில், கொளக்காநத்தம் கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளாக இயங்கி வந்த தனியார் நகை அடகு கடை தற்போது மூடிய நிலையில் காட்சியளிக்கிறது. அந்த கடையில் ஏற்கனவே நாங்கள் நகைகளை அடகு வைத்துள்ளோம். மேலும் இதுகுறித்து அந்த கடையின் பெண் ஊழியர் சரியான பதில் கூறவில்லை. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுத்து, அந்த நகை அடகு கடையில் நாங்கள் அடகு வைத்துள்ள நகைகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
Related Tags :
Next Story