டீ மாஸ்டர் மர்ம சாவு; கொலையா? போலீசார் விசாரணை


டீ மாஸ்டர் மர்ம சாவு; கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 15 March 2022 3:13 AM IST (Updated: 15 March 2022 3:13 AM IST)
t-max-icont-min-icon

டீ மாஸ்டர் மர்மமான முறையில் இறந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம்:
சேலம் டவுன் மேட்டு மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள சாக்கடையோரம் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. இது குறித்து அங்கிருந்தவர்கள் சேலம் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபர் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இறந்து கிடந்தவர் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் தீவட்டிப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் சுரேஷ் (வயது 30) என்பதும், சேலத்தில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார் என்பதும் தெரிய வந்தது.
இது குறித்து சுப்பிரமணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் சுரேசை யாராவது கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதாவது நோயால் பாதிக்கப்பட்டு இறந்தாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். டீ மாஸ்டர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் நேற்று அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story