அயோத்தியாப்பட்டணம் அருகே குடிநீர் வழங்க கோரி வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம்
அயோத்திப்பட்டணம் அருகே குடிநீர் வழங்க கோரி வீடுகளில் கருப்பு கொடி கட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அயோத்தியாப்பட்டணம்:
அயோத்திப்பட்டணம் அருகே குடிநீர் வழங்க கோரி வீடுகளில் கருப்பு கொடி கட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடிநீர் வினியோகம்
அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூர் காமராஜர் நகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த ஒரு மாத காலமாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட துறையினரிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமம் அடைந்து வந்தனர்.
கருப்பு கொடி
இந்த நிலையில் வீடுகளுக்கு குடிநீர் வராததை கண்டித்தும், குடிநீர் வழங்க கோரியும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் வீடுகளிலும், வீதிகளிலும் கருப்பு கொடி கட்டி, போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
நாங்கள் வசிக்கும் பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் சரிவர வினியோகம் செய்யாததால், கடுமையாக குடிநீரின்றி அவதிப்பட்டு வருகிறோம். இதுகுறித்து புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இதைகண்டித்து இந்த பகுதியில் 30-க்கும் மேற்பட்ட வீடுகளிலும், வீதிகளிலும், பிரதான சாலைகளிலும் கருப்பு கொடி கட்டி போராட்டம் செய்து வருகிறோம். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story