ஹோலி பண்டிகையையொட்டி கோரக்பூர்-எர்ணாகுளம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரெயில் இயக்கம்


ஹோலி பண்டிகையையொட்டி கோரக்பூர்-எர்ணாகுளம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரெயில் இயக்கம்
x
தினத்தந்தி 15 March 2022 4:11 AM IST (Updated: 15 March 2022 4:11 AM IST)
t-max-icont-min-icon

ஹோலி பண்டிகையையொட்டி கோரக்பூர்-எர்ணாகுளம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

சேலம்:
ஹோலி பண்டிகையையொட்டி கோரக்பூரில் இருந்து சேலம் வழியாக எர்ணாகுளத்திற்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி வருகிற 19-ந்தேதி காலை 8.30 மணிக்கு வண்டி எண் (05303) கோரக்பூரில் இந்த ரெயில் புறப்பட்டு 21-ந்தேதி அதிகாலை 4.02 மணிக்கு சேலம் வந்தடைகிறது. பின்னர் 4.05 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, கோவை வழியாக எர்ணாகுளம் செல்கிறது. அதே போன்று வண்டி எண் (05304) வருகிற 21-ந்தேதி இரவு 11.55 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு 22-ந்தேதி காலை 7.22 மணிக்கு சேலத்துக்கு வந்து 7.25 மணிக்கு ஜோலார்பேட்டை வழியாக கோரக்பூருக்கு புறப்பட்டு செல்கிறது.

Next Story