சாலை விபத்துகளால் ஏற்படும் பொருளாதார செலவுகள் குறித்த சென்னை ஐ.ஐ.டி.யின் ஆய்வறிக்கை


சாலை விபத்துகளால் ஏற்படும் பொருளாதார செலவுகள் குறித்த சென்னை ஐ.ஐ.டி.யின் ஆய்வறிக்கை
x
தினத்தந்தி 15 March 2022 3:37 PM IST (Updated: 15 March 2022 3:37 PM IST)
t-max-icont-min-icon

சென்னை ஐ.ஐ.டி.யின் சாலை பாதுகாப்புக்கான சிறப்பு மையம் மற்றும் மறுவாழ்வு பயோ என்ஜினீயரிங் குழு ஆகியவை இணைந்து ‘தமிழ்நாட்டில் நடைபெறும் சாலை விபத்துகளின் சமூக-பொருளாதார செலவுகள்' என்ற தலைப்பில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டன.

இந்த ஆய்வின்படி, தமிழ்நாட்டில் பொருளாதாரத்தின் மீது சாலை விபத்துகள் ஏற்படுத்தும் தாக்கத்தை குறைக்க, சாலை பாதுகாப்பில் அரசின் முதலீடுகள் அதிகரிக்கப்படவேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையை தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். 

நிகழ்ச்சிக்கு சென்னை ஐ.ஐ.டி.யின் இயக்குனர் பேராசிரியர் வி.காமகோடி மற்றும் ஆய்வாளர்களான பொறியியல் வடிவமைப்புத்துறை பேராசிரியர் வெங்கடேஷ் பாலசுப்ரமணியன், அதே துறையை சேர்ந்த மூத்த திட்ட விஞ்ஞானி பேராசிரியர் நிஜினா எம்.நாசர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Next Story