ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை முறை குறித்த சிறப்பு பயிற்சி முகாம்


ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை முறை குறித்த சிறப்பு பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 15 March 2022 4:15 PM IST (Updated: 15 March 2022 4:15 PM IST)
t-max-icont-min-icon

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அவசரகால சி.பி.ஆர். சிகிச்சை குறித்த சிறப்பு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது.

இந்த முகாமுக்கு ஆஸ்பத்திரி ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி தலைமை தாங்கினார். மருத்துவ நிலைய அதிகாரி டாக்டர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.

இந்த முகாமில் டாக்டர்கள், சி.பி.ஆர். உள்ளிட்ட அவசரகால சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள், நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பயிற்சி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்..

Next Story