ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் ராமலிங்கம், துணைத்தலைவர் ஆல்பர்ட், துணை செயலாளர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மூர்த்தி வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில், புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது. அவற்றை நீக்க வேண்டும். நிலுவையில் உள்ள மருத்துவ செலவை திரும்ப அளிக்கும் விண்ணப்பங்களை விரைந்து முடிக்க வேண்டும்.
காப்பீட்டு நிறுவனம் நிலுவையில் உள்ள மருத்துவ செலவு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
கோரிக்கைகள் குறித்து ஓய்வு பெற்ற துணை கலெக்டர் சாது, ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் பழனி ஆகியோர் பேசினர். இதில் ஏராளமான ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story