பெற்றோரை இழந்த 3 குழந்தைகளுக்கு நிவாரண உதவிகள்
ஆவணியாபுரம் கிராமத்தில் பெற்றோரை இழந்த 3 குழந்தைகளுக்கு நிவாரண உதவிகளை கலெக்டர் முருகேஷ் வழங்கினார்.
சேத்துப்பட்டு
ஆவணியாபுரம் கிராமத்தில் பெற்றோரை இழந்த 3 குழந்தைகளுக்கு நிவாரண உதவிகளை கலெக்டர் முருகேஷ் வழங்கினார்.
பெற்றோரை இழந்த குழந்தைகள்
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஒன்றியத்தில் உள்ள ஆவணியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன், இவரது மனைவி வேண்டா.
இவர்களுக்கு கார்த்திகா (வயது 15), சிரஞ்சீவி (14), நிைறமதி (11) ஆகிய குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் லோகநாதன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். வேண்டா கடந்த 3 மாதங்களுக்கு உடல்நல குறைவால் இறந்து விட்டார்.
பெற்றோரை இழந்த குழந்தைகளை ஆவணியாபுரம் கிராமத்தில் உள்ள அவர்களுடைய அத்தை முத்தாள் பராமரிப்பில் வளர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
கார்த்திகா, சிரஞ்சீவி, நிறைமதி ஆகியோர் ஆவணியாபுரம் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலை பள்ளியில் படித்து வருகின்றனர்.
இவர்கள் சாப்பாட்டுக்கு மிகவும் கஷ்டப்படுவதாகவும், பள்ளியில் வழங்கும் மதிய உணவை சாப்பிட்டு வந்தனர்.
வீடு கட்டுவதற்கான ஆணை
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் ஆவணியாபுரம் கிராமத்துக்கு சென்று பெற்றோரை இழந்த 3 குழந்தைகளை சந்தித்து பேசினார்.
அப்போது குழந்தைகள் பராமரிப்பு திட்டத்தின் கீழ் ரூ.2 ஆயிரம் வீதம் ரூ. 6 ஆயிரத்துக்கான காசோலையை முதல் தவணையாக வழங்கினார்.
அவர்கள் வசிக்கும் வீட்டுக்கு பட்டா வழங்கி, ஊரக வளர்ச்சி துறை மூலமாக இலவச வீடு கட்டுவதற்கான அனுமதி ஆணையையும் வழங்கினார்.
மேலும் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் வேண்டா இறந்தவருக்கு நிவாரண தொகை ரூ.22 ஆயிரத்து 500 மூத்த மகள் கார்த்திகா வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.
குடும்பத்துக்கு தேவையான உணவு பொருள், கல்விக்கான நோட்டு புத்தகம், புதிய ஆடைகள் ஆகியவையும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் பிரதாப், செய்யாறு உதவி கலெக்டர் விஜயராஜ், சேத்துப்பட்டு தாசில்தார் கோவிந்தராஜ், கிராம நிர்வாக அலுவலர் ஜான்சன், பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், மோகனசுந்தரம், கொழப்பலூர் வருவாய் அலுவலர் சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story