ம.ம.க. உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

திருச்சி, மார்ச். 16-
மனிதநேய மக்கள் கட்சி சார்பாக தமிழக அளவில் உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி, பேரூராட்சி, ஒன்றியக்குழு, ஊராட்சி பிரதிநிதிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் திருச்சி எல்.கே.எஸ். மகாலில் நடைபெற்றது. முகாமிற்கு கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் அப்துல் சமது எம்.எல். ஏ., ம.ம.க.பொருளாளர் உமர் ஹாஜியார், த.மு.மு.க.ஷபியுல்லாகான், த.மு.மு.க., ம.ம.க.மாவட்ட தலைவர் முகமது ராஜா, த.மு.மு.க. மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் அஸ்ரப் அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மனித நேய மக்கள் கட்சி திருச்சி மாவட்ட செயலாளர் கவுன்சிலர் பைஸ் அகமது வரவேற்று பேசினர். முகாமில் தலைமை நிர்வாக குழு உறுப்பினர்கள், அமைப்பு செயலாளர்கள், மாநில செயலாளர்கள், மாவட்ட தலைமை நிர்வாகிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி மன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் திருச்சி தெற்கு மாவட்டத்தின் சார்பில் 183-வது ஆம்புலன்சை, அனைத்து சமுதாய மக்கள் பயன்பாட்டுக்காக மாநில தலைவர் ஜவாஹிருல்லா அர்ப்பணித்தார்.
முகாமில் ம.ம.க.உள்ளாட்சி கவுன்சிலர்கள் பொதுமக்களிடம் எப்படி? நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ அறிவுரை மற்றும் ஆலோசனை வழங்கினார். அதைத்தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
கர்நாடக மாநிலத்தில் பள்ளிகளில் ஹிஜாப் அணிய கல்வித்துறை தடை விதித்தது செல்லும் என கர்நாடக ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பானது, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு முரணானது. ஹிஜாப் இஸ்லாத்தில் அவசியமான ஒன்று என இஸ்லாமியர்களின் புனித நூலான குரானில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு கவசமாக விளங்கும் ஹிஜாப், இஸ்லாமியர்களின் அடிப்படை கடமைகளில் ஒன்றாக இருக்கிறது. மக்களிடையே கருத்து வேறுபாடுகளை உருவாக்க பா.ஜ.க. அரசு முயற்சிக்கிறது. 5 மாநில தேர்தல் முடிவுகள் தமிழகத்தைப் போல எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்பதை நினைவூட்டுவதாக உள்ளது.
இவ்வாறு ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

Related Tags :
Next Story