விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலையில் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை
தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் தங்கராஜ் தலைமை தாங்கினார். மோகன்குமார், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சி.பி.ஐ. மாவட்ட செயலாளர் முத்தையன் கோரிக்கை குறித்து விளக்கி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், 100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியை குறைத்து திட்டத்தை சீர்குலைக்கும் மத்திய அரசை கண்டித்தும், வேலை செய்த நாட்களுக்கான சம்பளம் பாக்கியை உடனே வழங்க வேண்டும்.
100 நாள் வேலைத் திட்டத்தில் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 200 நாள் வேலையும், குறைந்தபட்ச கூலியாக தினமும் ரூ.600 வழங்க வேண்டும்.
இத்திட்டத்தை நகரத்திற்கும், பேரூராட்சிக்கும், விவசாய வேலைகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story