பேரணாம்பட்டு அருகே பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தை உடல் முட்புதரில் வீச்சு


பேரணாம்பட்டு அருகே  பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தை உடல் முட்புதரில் வீச்சு
x
தினத்தந்தி 15 March 2022 5:52 PM IST (Updated: 15 March 2022 5:52 PM IST)
t-max-icont-min-icon

பேரணாம்பட்டு அருகே பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தை உடல் முட்புதரில் வீசப்பட்டு கிடந்தது.

பேரணாம்பட்டு

பேரணாம்பட்டு அடுத்த டி.டி.மோட்டூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள விவசாய நிலத்தில் பண்ணை குட்டை உள்ளது. தண்ணீர் இல்லாத இந்த பண்ணை குட்டை அருகில் உள்ள முட்புதரில், பிறந்த 2 நாட்களே ஆன ஒரு பெண் குழந்தை உடல் கிடந்ததை பார்த்த பொது மக்கள் பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பேரணாம்பட்டு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து பிணமாக கிடந்த குழந்தை கள்ளக்காதலில் பிறந்ததா அல்லது, பெண் குழந்தை என்பதால் கொலைசெய்து வீசி விட்டு சென்றனரா, குழந்தை உடலை வீசியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story