தானேயில் 9 வயது சிறுவனை நரபலி கொடுக்க முயன்ற மந்திரவாதி கைது
தானேயில் 9 வயது சிறுவனை நரபலி கொடுக்க முயன்ற மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர்.
தானே,
தானேயில் 9 வயது சிறுவனை நரபலி கொடுக்க முயன்ற மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர்.
பில்லி சூனியம்
தானே வர்த்தக்நகரை சேர்ந்தவர் குல்திப் நிகம்(வயது40). மார்க்கெட்டிங் வேலை பார்த்து வந்தார். கொரோனா தொற்று காரணமாக வேலை இழந்த இவர், பில்லி சூனியம் வைக்கும் மந்திரவாத வேலைகளில் ஈடுபட்டு வருமானம் பார்த்து வந்தார். இவரது சகோதரி பிரியங்கா(31) கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து 9 வயது மகனுடன் குல்தீப் நிகமுடன் வீட்டில் தங்கி இருந்தார்.
இந்த நிலையில் சிறுவனின் நடவடிக்கையை கண்காணித்த குல்தீப் நிகம் தனது சகோதரி பிரியங்காவிடம் இவன் வருங்காலத்தில் கொலையாளியாகவும், இல்லையெனில் பாலியல் வன்கொடுமை செய்பவனாகவும் மாறுவான் என குற்றம் சாட்டினார். இதனால் பயந்து போன பிரியங்கா தனது மகனை தீவிரமாக கண்காணித்து வந்தார்.
நரபலி கொடுக்க முயற்சி
சம்பவத்தன்று பிரியங்கா வெளியே சென்றிருந்தார். வீட்டில் இருந்த 9 வயது சிறுவனை குல்தீப் நிகம் தனது காதலி சினோகா ஷிண்டே மற்றும் நண்பர் கிஷோர் நவ்லே ஆகியோருடன் சேர்ந்து பாலியல் ரீதியாக சித்ரவதை செய்தனர். பின்னர் நரபலி கொடுக்க முடிவு செய்து சிறுவனை குளியல் அறையில் அடைத்து வைத்தனர்.
அப்போது பிரியங்கா வீடு திரும்பிய போது இச்சம்பவம் குறித்து தெரியவந்தது. உடனே மகனை மீட்டு சம்பவம் குறித்து வர்த்தக் நகர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து குல்தீப் நிகமை கைது செய்தனர். இதில் தொடர்புடைய மற்ற 2 பேரை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story