மாணவ மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை
வாணியம்பபாடி ஜாப்ராபாத் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன.
வாணியம்பாடி
வாணியம்பபாடி ஜாப்ராபாத் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஜாப்ரபாத் அரசு உருது ஆண்கள் மற்றும் பெண்கள் நடுநிலைப்பள்ளியில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் நடந்தது. ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி கலந்து கொண்டு குடற்புழு நீக்க மாத்திரைகள் உட்கொள்வதால் உண்டாகும் நன்மைகள் பற்றி எடுத்துக் கூறி, மாணவ- மாணவிகளுக்கு மாத்திரை வழங்கினார்.
இதில் பள்ளி தலைமை ஆசிரியர், ஊராட்சி மன்ற தலைவர், உள்ளாட்சி பிரதிநிதிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story