மராட்டியத்தில் போலீசாருக்கு விடுமுறை நாட்கள் அதிகரிப்பு
மராட்டியத்தில் போலீசாருக்கு விடுமுறை நாட்கள் அதிகரித்துள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் போலீசாருக்கு விடுமுறை நாட்கள் அதிகரித்துள்ளது.
மராட்டியத்தில் போலீசாருக்கு ஆண்டுக்கு தற்செயல் விடுப்பு (சி.எல்.) 12 நாட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் போலீசாருக்கு தற்செயல் விடுப்பு நாட்கள் 12-ல் இருந்து 20 ஆக அதிகரித்து மாநில அரசு முடிவு செய்து உள்ளது.
இதுகுறித்து மாநில உள்துறை இணை மந்திரி சாம்புராஜ் தேசாய் சட்டசபையில் கூறுகையில், "மராட்டிய அரசு போலீசாருக்கு வழங்கப்பட்டு வரும் தற்செயல் விடுப்பு நாளை 12-ல் இருந்து 20 ஆக அதிகரிக்க முடிவு செய்து உள்ளது. இதேபோல வாரவிடுமுறைக்கு முந்தைய நாள் போலீசாருக்கு இரவு பணி வழங்க கூடாது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
இந்தநிலையில் போலீசாருக்கு விடுமுறை நாள் அதிகரிக்கப்பட்டது குறித்து உள்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், " போலீசார் பண்டிகை நாட்கள், தேச விடுமுறை நாட்கள் சமயங்களில் விடுமுறை எடுக்க முடிவதில்லை. எனவே அவர்களுக்கு தற்செயல் விடுப்பு நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது" என்றார்.
Related Tags :
Next Story