ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை தேங்காய் விலை குறைந்தது


ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை தேங்காய் விலை குறைந்தது
x
தினத்தந்தி 15 March 2022 6:11 PM IST (Updated: 15 March 2022 6:11 PM IST)
t-max-icont-min-icon

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடந்த ஏலத்தில் கொப்பரை தேங்காய் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

பொள்ளாச்சி

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடந்த ஏலத்தில் கொப்பரை தேங்காய் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

கொப்பரை தேங்காய் ஏலம் 

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வாரந்தோறும் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதற்கு விற்பனை கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் தலைமை தாங்கினார். ஏலத்திற்கு 114 விவசாயிகள் கொப்பரை தேங்காய்களை கொண்டு வந்தனர்.
கொப்பரை தேங்காய்களை தரம் பிரித்து ஏலம் விடப்பட்டது. 7 வியாபாரிகள் கலந்துகொண்டு ஏலம் எடுத்தனர். இதற்கிடையில் வரத்து அதிகரிப்பு, எண்ணெய் மார்க்கெட்டில் விலை சரிவு காரணமாக கடந்த வாரத்தை விட கொப்பரை தேங்காய் விலை மிகவும் குறைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் கூறியதாவது:-

விலை குறைந்தது

ஆனைமலையில் நடந்த ஏலத்திற்கு விவசாயிகள் மொத்தம் 708 மூட்டை கொப்பரை தேங்காய்களை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். 385 மூட்டை முதல் தர கொப்பரை தேங்காய் கிலோவுக்கு ரூ.88 முதல் ரூ.93.50 வரையும், 323 மூட்டை 2-ம் தர கொப்பரை தேங்காய் கிலோவுக்கு ரூ.75 முதல் ரூ.84.40 வரையும் ஏலம் போனது.
கடந்த வாரத்தை விட 18 மூட்டை வரத்து அதிகரிப்பு உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த வாரம் கிலோவுக்கு 11 வரை விலை உயர்ந்தது. இதற்கிடையில் எண்ணெய் மார்க்கெட்டில் விலை சரிவு காரணமாக கடந்த வாரத்தை விட கிலோவுக்கு ரூ.9 விலை குறைந்து உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story