நம்பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை
திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் நம்பெருமாள்- தாயார் சேர்த்தி சேவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருச்சி, மார்ச்.16-
திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் நம்பெருமாள்- தாயார் சேர்த்தி சேவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
பங்குனி தேர் திருவிழா
108 திவ்ய தேசங்களில் 2-வது வைணவத்தலம் என்ற பெருமைக்குரியது உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் நம்பெருமாள்-தாயார் (கமலவல்லி நாச்சியார்) சேர்த்தி சேவை விழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
அதன்படி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவின் 6-ம் நாளான இன்று அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து தங்கப்பல்லக்கில் புறப்பட்டு வழிநெடுக வழிநடை உபயங்கள் கண்டருளி காலை 11 மணி அளவில் உறையூர் நாச்சியார் கோவில் வந்து சேர்ந்தார். கோவில் மகாஜனம் உபய மண்டபத்தில் நம்பெருமாளுக்கு சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
சாமி தரிசனம்
இதனைத்தொடர்ந்து நாச்சியார் முன் மண்டபத்தில் பகல் 12 மணிக்கு நம்பெருமாள் எழுந்தருளினார். பகல் 1.15 மணிக்கு அந்த மண்டபத்தில் இருந்து புறப்பட்டு சேர்த்தி மண்டபம் சென்றடைந்தார்.
பிற்பகல் 2 மணிக்கு சேர்த்தி மண்டபத்தில் நம்பெருமாள்-கமலவல்லி நாச்சியார் ஒன்றாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தரும் சேர்த்தி சேவை நடைபெற்றது. இந்த காட்சியை காண்பதற்காகவும், நம்பெருமாள்- நாச்சியாரின் அருள் பெறுவதற்காகவும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் ஒவ்வொருவராக வந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.
விழாக்கோலம் பூண்டது
தாயார் சேர்த்தி சேவை விழாவையொட்டி கோவில் வளாகம் மட்டுமின்றி உறையூர் பகுதி முழுவதுமே நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தது. பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வருகை புரிந்ததால் அவர்களை ஒழுங்கு படுத்துவதற்காக போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். வெயிலில் வரும் பக்தர்களுக்காக தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு குளிர்பானங்களும் இலவசமாக வழங்கப்பட்டன.
பிற்பகல் 2 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை நம்பெருமாள்- கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை நடைபெற்றது. பின்னர் 1.30 மணிக்கு நம்பெருமாள் கமலவல்லி நாச்சியார் கோவிலில் இருந்து புறப்பட்டு வௌி ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றிக்கொண்டார். தொடர்ந்து நாளை (புதன்கிழமை) அதிகாலை 4 மணிக்கு ஸ்ரீரங்கம் கோவில் கண்ணாடி அறையை அடைந்தார்.

Related Tags :
Next Story