கெம்மங்குப்பத்தில் காளைவிடும் விழாவில் மாடுகள் முட்டி 8 பேர் காயம்
கெம்மங்குப்பத்தில் காளைவிடும் விழாவில் மாடுகள் முட்டி 8 பேர் காயமடைந்தனர்.
கே.வி.குப்பம்
கே.வி.குப்பத்தை அடுத்த கெம்மங்குப்பத்தில் காளைவிடும் விழா நடைபெற்றது. இதில் 170 காளைகள் பங்கேற்றன. முதல் பரிசு ரூ.50 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.40 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.30 ஆயிரம் என 60 பரிசுகள் அறிவிக்கப்பட்டு இருந்தன. முதல் பரிசை மகாதேவமலை காடுவெட்டி குரு என்ற மாடும், இரண்டாம் பரிசை சீலேரி சிட்டுக்குருவி என்ற மாடும், மூன்றாம் பரிசை விருதம்பட்டு பல்சர் என்ற மாடும் பெற்றன. விழாவில் கலந்து கொண்ட 7 வாலிபர்கள் மாடுகள் முட்டியதில் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒருவர் மட்டும் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்ஜெயன், கே.வி.குப்பம் தாசில்தார் சரண்யா, போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி, ஊராட்சி மன்ற தலைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியக் குழு உறுப்பினர் தாமோ.ரவி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கர், அருண்காந்தி உள்ளிட்டோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தனர். விழா ஏற்பாடுகளை கெம்மங்குப்பம் கிராம விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story