பள்ளிபாளையம் அருகே கல்குவாரி குட்டையில் தவறிவிழுந்த மாற்றுத்திறனாளி-தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர்


பள்ளிபாளையம் அருகே கல்குவாரி குட்டையில் தவறிவிழுந்த மாற்றுத்திறனாளி-தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர்
x
தினத்தந்தி 15 March 2022 8:02 PM IST (Updated: 15 March 2022 8:02 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிபாளையம் அருகே கல்குவாரி குட்டையில் தவறிவிழுந்த மாற்றுத்திறனாளியை தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர்.

பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் அருகே உள்ள வெப்படையை சேர்ந்தவர் சேகர் (வயது 47). மாற்றுத்திறனாளியான இவர் இன்று காலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு கல்குவாரி குட்டையின் அருகே நடந்து சென்றார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக அந்த குட்டையில் தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்தார். இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் வெப்படை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். 
உடனே தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் மோகன் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கயிறு கட்டி கல்குவாரி குட்டையில் இறங்கினர். பின்னர் அவர்கள் மாற்றுத்திறனாளி சேகரை கயிறு மூலம் கட்டி ேமலே கொண்டு வந்து உயிருடன் மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சேகர் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். கல்குவாரி குட்டையில் தவறிவிழுந்த மாற்றுத்திறனாளி உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story