மோட்டார் சைக்கிளை திருட முயன்ற 2 சிறுவர்கள் கைது


மோட்டார் சைக்கிளை திருட முயன்ற 2 சிறுவர்கள் கைது
x
தினத்தந்தி 15 March 2022 8:24 PM IST (Updated: 15 March 2022 8:24 PM IST)
t-max-icont-min-icon

தளி அருகே மோட்டார் சைக்கிளை திருட முயன்ற 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தேன்கனிக்கோட்டை:
தளி அருகே உள்ள உப்பாரப்பள்ளியை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 38). கேமராமேன். இவர் அந்த பகுதியில் உள்ள கடை ஒன்றில் டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது அவருடைய மோட்டார் சைக்கிளை 2 பேர் திருட முயன்றனர். அவர்களை பொதுமக்கள் உதவியுடன் பிடித்த மஞ்சுநாத், தளி போலீசில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்டவர்கள் ஜவளகிரி மற்றும் கர்நாடக மாநிலம் கொப்பாகேட் பகுதியை சேர்ந்த 18 வயது சிறுவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story