அரசு பள்ளிகள் முன்பு வேகத்தடை அமைக்கப்படுமா?
திட்டச்சேரி அருகே அரசு பள்ளிகள் முன்பு வேகத்தடை அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
திட்டச்சேரி:
திட்டச்சேரி அருகே அரசு பள்ளிகள் முன்பு வேகத்தடை அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
அரசு பள்ளிகள்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி புறாக்கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி நடுக்கடை-குத்தாலம் மெயின் சாலையில் உள்ளது.
இந்த சாலையை குத்தாலம், நரிமணம், எரவாஞ்சேரி, துறையூர், உத்தூர், நாட்டார்மங்கலம், தேவன்குடி, மத்தியக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக தினமும் கடைத்தெரு, வங்கி, தபால் நிலையம், அரசு அலுவலகங்கள் என தினமும் சென்று வருகின்றன.
வேகத்தடை அமைக்க வேண்டும்
அரசு பள்ளிகள் வாசலில் உள்ள சாலையில் வேகத்தடைகள் இல்லாததால் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே பள்ளிகள் முன்பு சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என நெடுஞ்சாலைத் துறையினருக்கு பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பள்ளிகள் முன்பு சாலைகளில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story