சாராயம் கடத்திய வாலிபர் கைது


சாராயம் கடத்திய வாலிபர் கைது
x
தினத்தந்தி 15 March 2022 8:25 PM IST (Updated: 15 March 2022 8:25 PM IST)
t-max-icont-min-icon

நாகூரில் சாராயம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நாகூர்:
 மேலவாஞ்சூர் சோதனை சாவடியில் நேற்று முன்தினம் இரவு நாகூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் கையில் பையுடன் நடந்து வந்த நபரை போலீசார் சோதனை செய்தனர். அந்த பையில்  சாராய பாக்கெட்டுகள் இருந்தது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அவர், திட்டச்சேரி தைக்கால் தெருவை சேர்ந்த ரவி மகன் விக்னேஷ் (வயது 21) என்பதும், காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேசை கைது செய்து அவரிடம் இருந்து 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். 
இதேபோல நாகூர் - கங்களாங்சேரி சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார்  மோட்டார் சைக்கிளை பார்த்த போது அதன் அருகில் கிடந்த ஒரு சாக்குமூட்டையை பிரித்து பார்த்த போது அதில்  110 லிட்டர் பாக்கெட் சாராயம் இருந்தது.  இதை தொடர்ந்து சாராய பாக்கெட்டுகளையும்,  மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்து தப்பி ஓடிய நபரை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story