கரும்பு பயிரை பஞ்சு அஸ்வினி பூச்சி தாக்குதல்


கரும்பு பயிரை பஞ்சு அஸ்வினி பூச்சி தாக்குதல்
x
தினத்தந்தி 15 March 2022 8:26 PM IST (Updated: 15 March 2022 8:26 PM IST)
t-max-icont-min-icon

மூங்கில்துறைப்பட்டு பகுதியில் கரும்பு பயிரை பஞ்சு அஸ்வினி பூச்சி தாக்குவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

மூங்கில்துறைப்பட்டு, 

மூங்கில்துறைப்பட்டு பகுதி மக்கள் விவசாயத்தை முதன்மை தொழிலாக செய்து வருகிறார்கள். இந்த பகுதியில் கரும்பு, நெல், மக்காச்சோளம், கேழ்வரகு, மணிலா, உளுந்து, மஞ்சள், வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சாகுபடி செய்திருந்த கரும்பு பயிரை பஞ்சு அஸ்வினி பூச்சிகள் தாக்கியுள்ளன. இதனை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

வளர்ச்சி பாதிப்பு 

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கரும்பு பயிரை பஞ்சு அஸ்வினி பூச்சிகள் தாக்கியுள்ளன. இதனால் கரும்பின் சோகை வெள்ளை நிறத்தில் மாறியுள்ளது. இந்நோய் முற்றிய பகுதியில் கரும்பு சோகை முற்றிலுமாக கருப்பு நிறத்தில் மாறிவிட்டது. மேலும் கரும்பின் வளர்ச்சி பெருமளவில் குறைந்திருக்கிறது. பலவகையான மருந்துகள் தெளித்தும், இந்த பூச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. அடுத்தடுத்த கரும்பு தோட்டங்களுக்கும் இந்நோய் வேகமாக பரவுகிறது என்றனர். எனவே வேளாண்துறை அதிகாரிகள், நோய் பாதிக்கப்பட்ட கரும்புகளை பார்வையிட்டு அதற்கு எந்த வகையான மருந்துகளை தெளிக்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Next Story