நாகையில், மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


நாகையில், மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 March 2022 8:26 PM IST (Updated: 15 March 2022 8:26 PM IST)
t-max-icont-min-icon

ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தக்கோரி நாகையில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்:
ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தக்கோரி நாகையில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
மின்வாரிய ஊழியர்களின் தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ளாயீஸ் பெடரேஷன் சார்பில் நாகை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் செல்வராஜூ தலைமை தாங்கினார். வட்ட கிளை செயலாளர்கள் சாரதி, வீராசாமி, தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.
உற்பத்தி திறன்
 துறைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு நிறுத்திய ஆண்டு சம்பள உயர்வை மீண்டும் வழங்க வேண்டும். மேட்டூர் பணிமனை உற்பத்தி திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. 
இதில் 100-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story