பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ.


பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ.
x
தினத்தந்தி 15 March 2022 8:27 PM IST (Updated: 15 March 2022 8:30 PM IST)
t-max-icont-min-icon

திருமருகல் ஒன்றிய பகுதியில் பொதுமக்களிடம் குறைகளை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. கேட்டறிந்தார்.

திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றியம் குத்தாலம், எரவாஞ்சேரி, கொட்டாரக்குடி, கீழத்தஞ்சாவூர், திருப்பயத்தங்குடி ஊராட்சி பகுதிகளில் முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். முன்னதாக ஊராட்சி மன்ற அலுவலகங்களில் முகாம் அமைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து ஊராட்சி பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்களை பார்வையிட்டார். அப்போது பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவை ஆய்வு செய்தார். பின்னர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பாத்திமா ஆரோக்கியமேரி, ஒன்றிய குழு உறுப்பினர் சரவணன், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story