தூய்மைப் பணியாளர் நல வாரியத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்


தூய்மைப் பணியாளர் நல வாரியத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 15 March 2022 8:46 PM IST (Updated: 15 March 2022 8:46 PM IST)
t-max-icont-min-icon

தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவோர் தூய்மைப் பணியாளர் நல வாரியத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்:
தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவோர் தூய்மைப் பணியாளர் நல வாரியத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நலவாரியம்
தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் தமிழக அரசின் தூய்மைப் பணியாளர்கள் நல வாரியத்தில் தற்காலிக, ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் உறுப்பினராக பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம்.
 விண்ணப்பங்கள் அந்தந்த பகுதிக்குட்பட்ட நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி அலுவலகங்களில் வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய அலுவலரின் சான்றொப்பத்துடன் சாதி சான்று நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து நாகை மாவட்ட அலுவலக வளாகத்தில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
நலத்திட்டங்கள்
 தூய்மைப் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுள்ள உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு புதிய அரசாணையின்படி உயர்த்தப்பட்ட கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம், மகப்பேறு உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.
 தூய்மைப் பணியாளர்கள் நல வாரியத்தில்  உறுப்பினராக பதிவு செய்வதற்கான விண்ணப்பமும், அடையாள அட்டை பெறுவதற்கும் மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கும், தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04365-250305 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு  அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story