பள்ளிவாசல்களுக்கு போலீஸ் பாதுகாப்பு


பள்ளிவாசல்களுக்கு போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 15 March 2022 8:53 PM IST (Updated: 15 March 2022 8:53 PM IST)
t-max-icont-min-icon

ஹிஜாப் குறித்து கோர்ட்டு தீர்ப்பு எதிரொலியாக, தேனியில் உள்ள பள்ளிவாசல்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தேனி:

ஹிஜாப் அணியும் விவகாரம் தொடர்பாக கடந்த சில மாதங்களாக கர்நாடகாவில் முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தி வந்தனர். ஹிஜாப் அணிவதற்கு அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, கர்நாடக ஐகோர்ட்டில் முஸ்லிம் மாணவிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

 இந்த வழக்கில், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்தது செல்லும் என்றும், ஹிஜாப் அணி தடைவிதித்ததற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்வதாகவும் கர்நாடக ஐகோர்ட்டு  உத்தரவிட்டது. 
இந்த உத்தரவை தொடர்ந்து தடையை மீறி யாரேனும் ஆர்ப்பாட்டம் நடத்தினால் தடுக்கும் வகையில், தேனி மாவட்டத்தில் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 

அதன்படி, பள்ளி வாசல்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தேனி நகரில் நேரு சிலை சிக்னல், பழைய பள்ளிவாசல் ஆகிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story