கலாசார குழு மூலம் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம்
சந்திரபுரத்தில் மாணவ, மாணவிகளின் பெற்றோருக்கு கலாசார குழு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருப்பத்தூர்
சந்திரபுரத்தில் மாணவ, மாணவிகளின் பெற்றோருக்கு கலாசார குழு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கந்திலி ஒன்றியம் சந்திரபுரம் ஊராட்சியில் பள்ளிக்கல்வித்துறை ஒருங்கிணைந்த கல்வி திட்டம் முலம் அரசு மேல்நிலை மற்றும் ஆரம்பப் பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி மூலம் கல்வி கலாச்சார குழு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் ஜவகர்லால் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் திவாகர் வரவேற்றார். பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலைக் குழு சார்பில் மாணவ, மாணவிகள் ஒழுக்கமாக பள்ளிக்கு அனுப்புவது, இடைநிலை நின்ற மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தி கலை நிகழ்ச்சிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் ஜோசப் டீ சில்வா உள்பட மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் கண்ணகி சாமுவேல் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story