ராணிப்பேட்டையில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது. முகாமில் உடல் உழைப்பிற்கு ஏற்ப மருத்துவர்களின் நேரடி ஆய்வுக்குப் பின்னர் மாற்றுத்திறனாளிகள் 323 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவுரையின்படி, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 83 மாற்றுத்திறனாளிகள் பெயர் பதிவும், 157 புதிய பயனாளிகளுக்கு பதிவும் மேற்கொள்ளப்பட்டது.
முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு 7 செல்போன்கள், ஒருவருக்கு காதொலிக் கருவி, மொபட், 3 பேருக்கு சக்கர நாற்காலி என மொத்தம் 14 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வழங்கினார். முகாமில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story