கூடலூரில் விவசாயிகளுக்கு மண்வள மேலாண்மை பயிற்சி
கூடலூரில் விவசாயிகளுக்கு மண்வள மேலாண்மை பயிற்சி நடந்தது.
கூடலூர்
கூடலூர் தோட்டக்கலைத்துறை மூலம் தேசிய மண்வள இயக்கத் திட்டத்தின் கீழ் மங்குல் பகுதியில் விவசாயிகளுக்கு மண்வள மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது.
தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் விஜய லட்சுமி தலைமை தாங்கினார். மண்வள வேளாண் அலுவலர் நிர்மலாதேவி விவசாயிகளுக்கு மண் வளம் குறித்த பயிற்சி அளித்தார்.
முகாமில் மண் வளத்தை அதிகரித்து மகசூலை கூட்டுவது குறித்து விளக்கமளிக்கப்பட்டது. தொடர்ந்து மண்வள அட்டை பயன்பாடு, மண் பரிசோதனைக்கு ஏற்ப உரம் இடுவது பொருத்து விளக்கப்பட்டது.
இதில் விவசாயிகள், தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story