காப்பீடு நிறுவனங்களை கண்டித்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


காப்பீடு நிறுவனங்களை கண்டித்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 March 2022 9:20 PM IST (Updated: 15 March 2022 9:20 PM IST)
t-max-icont-min-icon

காப்பீடு நிறுவனங்களை கண்டித்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஊட்டி

தமிழக அரசு நடைமுறைப்படுத்திய புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் உயிர்காக்கும் சிகிச்சை மேற்கொள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற பின்னர் முழு தொகையை செலுத்த கட்டாயப்படுத்துவது, மருத்துவ குழு அங்கீகரிக்கும் சிகிச்சைக்கான கட்டணத்தை திரும்ப வழங்காமல் காப்பீடு நிறுவனங்கள் நிலுவையில் வைத்து உள்ளதை கண்டித்தும் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில், ஊட்டி ஸ்டேட் பேங்க் அருகே காப்பீடு நிறுவனம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 நீலகிரி மாவட்ட தலைவர் மாதன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம ்எழுப்பினார்கள். இதில் இந்த சங்கத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். 


Next Story