தேவாலாவில் தனியார் தார் கலவை மையம் திறப்பு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசார் குவிப்பு
தேவாலாவில் தனியார் கலவை மையம் திறக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
கூடலூர்
தேவாலாவில் தனியார் கலவை மையம் திறக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
தார் கலவை மையம்
கூடலூர் தாலுகா தேவாலா பகுதியில் தனியார் கலவை மையம் உள்ளது. இந்த மையம் குடியிருப்பு பகுதியில் செயல்படுவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதுடன், பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவுவதால் போக்கர் காலனி மக்கள் இந்த மையம் செயல்பட எதிர்ப்பு தெரிவித்ததுடன் பல்வேறு போராட்டங்களையும் நடத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து கடந்த ஆண்டு தார் கலவை மையம் செயல்பட தடை விதித்தனர். இந்த நிலையில் தார் கலவை மைய நிர்வாகம் தரப்பில் மீண்டும் முறையிடப்பட்டது. இதைத்தொடர்ந்து தார் கலவை மையம் திறந்து செயல்பட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அனுமதி வழங்கினர்.
பொதுமக்கள் எதிர்ப்பு
இந்த நிலையில் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் ராமலிங்கம், குமார், இன்ஸ்பெக்டர்கள் திருஞானசம்பந்தம், அருள், அமுதா உள்பட ஏராளமான போலீசார் மற்றும் அதிவிரைவு படை போலீசார் அந்த தார் கலவை மையம் முன்பு நிறுத்தப்பட்டனர்.
பின்னா அந்த தார் கலவை மையம் திறக்கப்பட்டது. பின்னர் இந்த மையத்தில் இருந்து சாலைகள் அமைக்கும் இடங்களுக்கு லாரிகள் மூலம் கலவை கொண்டு செல்லப்பட்டது.
இந்த மையம் திறக்கப்பட்டதால் அதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் அவர்கள் அங்கு வந்து போராட்டம் நடத்தலாம் என்ற தகவலும் பரவியது.
அதிகாரிகள் ஆய்வு
இதையடுத்து கூடலூர் தாசில்தார் சித்தராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், மாசு கட்டுப்பாட்டு வாரியகோட்ட பொறியாளர் லிவிங்ஸ்டன் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் தார் கலவை மையத்துக்குள் சென்று ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கி உள்ளதால் தார் கலவை மையம் திறக்கப்பட்டு உள்ளது என்றனர். தொடா்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story