ஹிஜாப்பை கழற்ற கூறியதால் தேர்வை புறக்கணித்த முஸ்லிம் மாணவிகள்
யாதகிரியில் ஹிஜாப்பை கழற்றிவிட்டு தேர்வு எழுத கூறிய நிலையில் முஸ்லிம் மாணவிகள் தேர்வை புறக்கணித்துவிட்டு வகுப்புகளை விட்டு வெளியேறிய சம்பவம் நடந்துள்ளது
யாதகிரி: யாதகிரியில் ஹிஜாப்பை கழற்றிவிட்டு தேர்வு எழுத கூறிய நிலையில் முஸ்லிம் மாணவிகள் தேர்வை புறக்கணித்துவிட்டு வகுப்புகளை விட்டு வெளியேறிய சம்பவம் நடந்துள்ளது.
ஹிஜாப் விவகாரத்தில் தீர்ப்பு
ஹிஜாப் விவகாரத்தில் நேற்று கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதில் கல்வி நிலையங்களில் மத அடையாள ஆடைகளை அணிய தடை விதித்து அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் யாதகிரி மாவட்டம் சுராப்புரா தாலுகா கெம்பாவி டவுனில் உள்ள பி.யூ. கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்து முஸ்லிம் மாணவிகள் தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர்.
அப்போது கல்லூரி நிர்வாகம் முஸ்லிம் மாணவிகளிடம் ஹிஜாப்பை கழற்றிவிட்டு தேர்வை எழுதும்படி கூறியது. அதில் சில மாணவிகள் ஹிஜாப்பை கழற்றிவிட்டு தேர்வு எழுதினர்.
ஆனால் 8 மாணவிகள் ஹிஜாப்பை கழற்ற மறுத்து தேர்வை புறக்கணித்து வகுப்பறையில் இருந்து வெளியேறினர்.
போலீஸ் குவிப்பு
இதேபோல் ராய்ச்சூர் மாவட்டத்தில் லிங்கசுகூர், சிந்தனூரு, ராய்ச்சூர் ஆகிய பகுதிகளில் வந்த முஸ்லிம் மாணவ-மாணவிகளும், அவர்களது பெற்றோர்களும் திரண்டனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபடும் சூழல் உருவானது. இதையடுத்து அனைத்து பள்ளி, கல்லூரிகள் முன்பும் போலீசார் குவிக்கப்பட்டனர்.
ஒவ்வொரு கல்லூரி முன்பும் தலா 20 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
Related Tags :
Next Story