கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்புக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்-பசவராஜ் பொம்மை
ஹிஜாப் வழக்கில் ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்
பெங்களூரு: ஹிஜாப் வழக்கில் ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
ஹிஜாப் வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
ஒத்துழைக்க வேண்டும்
கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகளில் ஹிஜாப் அணிவது தொடர்பாக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. இந்த தீர்ப்பை அனைவரும் ஏற்று பின்பற்ற வேண்டும். இந்த தீர்ப்பை அமல்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
சமுதாயத்தில் அனைவரும் அமைதி காக்க வேண்டும். அனைத்து மாணவர்களும் ஐகோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பை ஏற்று தங்களின் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.மாணவர்களுக்கு கல்வியை விட வேறு விஷயங்கள் முக்கியமாக இருக்கக்கூடாது.
தீர்ப்பை ஏற்க...
பொதுமக்கள், அனைத்து சமுதாய தலைவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்த தீர்ப்பை ஏற்க வேண்டும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
Related Tags :
Next Story