தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
திண்டுக்கல்:
குப்பைகள் தீவைத்து எரிப்பு
திண்டுக்கல்லில், பொதுப்பணித்துறை அலுவலகம் முன்புள்ள சாலையின் ஓரத்தில் குப்பைகள் கொட்டி குவிக்கப்படுகின்றன. அதோடு பிளாஸ்டிக் கழிவுகள் தீவைத்து எரிக்கப்படுகின்றன. அதில் இருந்து வெளியேறும் புகை காற்றில் கலப்பதால் சுவாசக்கோளாறு, கண் எரிச்சல் போன்றவை ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் சிரமப்படுகின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தனலட்சுமி, திண்டுக்கல்.
விபத்தை ஏற்படுத்தும் மண்
தேனி அருகே குன்னூரில் வைகை ஆற்றின் குறுக்கே 2 பாலங்கள் உள்ளன. இந்த பாலங்களின் ஓரத்திலும் மண் பரவி கிடக்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். எனவே விபத்தை ஏற்படுத்தும் மண்ணை அகற்ற வேண்டும்.
-கதிரவன், தேனி.
குளம் தூர்வாரப்படுமா?
திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள அய்யன்குளம் கழிவுநீர், குப்பைகளால் நிரம்பி விட்டது. இதனால் நிலத்தடி நீர் மாசடைவதோடு, சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் வசிக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுத்தொல்லையும் அதிகரித்து விட்டது. எனவே அய்யன்குளத்தை தூர்வாரி மழைநீரை சேமிக்க வேண்டும்.
-ஜெயா, திண்டுக்கல்.
பராமரிப்பு இல்லாத பொதுக்கழிப்பறைகள்
தேனி புதிய பஸ் நிலையத்தில் பொதுக்கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. கழிப்பறைக்குள் செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பலர் திறந்தவெளியை சிறுநீர் கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இதானல் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதை தடுக்க பொதுக்கழிப்பறைகளை முறையாக பராமரிக்க வேண்டும்.
-ராஜா, தேனி.
Related Tags :
Next Story