மாணவர் விடுதி திறப்பு விழா


மாணவர் விடுதி திறப்பு விழா
x
தினத்தந்தி 15 March 2022 9:48 PM IST (Updated: 15 March 2022 9:48 PM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் மாணவர் விடுதி திறப்பு விழா நடந்தது.

சங்கராபுரம், 

சங்கராபுரம் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் ரூ.3 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் மாணவர் விடுதி கட்டப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து விடுதியில் நடந்த விழாவில் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் குத்துவிளக்கேற்றி, இனிப்பு வழங்கினார். பின்னர் அவர் விடுதியின் சமையல் அறை, படுக்கை அறை, குளியல் அறை, கழிவறை உள்ளிட்டவைகளை பார்வையிட்டார். இதில் மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் சையத் அப்துல்பாரி, சங்கராபுரம் ஒன்றியக்குழு தலைவர் திலகவதி நாகராஜன், பேரூராட்சி மன்ற தலைவர் ரோஜா ரமணிதாகபிள்ளை, கல்லூரி முதல்வர் சிவகங்கை, தாசில்தார் பாண்டியன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், விடுதி காப்பாளர் முரளி மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story