மொரப்பூர் அருகே 2 கிராம் நகைக்காக மூதாட்டி குத்திக்கொலை
மொரப்பூர் அருகே 2 கிராம் நகைக்காக மூதாட்டி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
மொரப்பூர்:
மொரப்பூர் அருகே 2 கிராம் நகைக்காக மூதாட்டி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
மூதாட்டி கொலை
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள ராமாபுரத்தை சேர்ந்தவர் மூக்கன். இவருடைய மனைவி இந்திரா (வயது 60). கூலித்தொழிலாளி. மூதாட்டி வீட்டில் தனியாக இருந்தார். நேற்று மாலை அதேபகுதியில் உள்ள இவருடைய பேத்தி சுமிதா, மூதாட்டி வீட்டுக்கு வந்தார். அப்போது மூதாட்டி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுமிதா கூச்சலிட்டார். அவருடைய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது மர்ம நபர்கள் மூதாட்டியை கத்தியால் குத்திக்கொலை செய்து விட்டு காதில் இருந்த 2 கிராம் தங்கத்தோட்டை திருடி சென்றது தெரியவந்தது.
போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
இதுகுறித்து மொரப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பெனாசிர் பாத்திமா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியை கொலை செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 2 கிராம் நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story