பேடறஅள்ளியில் சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
பேடறஅள்ளியில் நடந்த சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே பேடறஅள்ளியில் சக்திமாரியம்மன் கோவில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 4-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கணபதி, லட்சுமி, சரஸ்வதி பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள், வாஸ்து பூஜை உள்பட பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகள் பிரதிஷ்டை செய்து, அஷ்டபந்தனம் சாற்றும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து மேளதாளம் முழங்க புனிதநீர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் கோபுர கலசம், அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவில் அர்ச்சகர் கிருபாகரன் தலைமையிலான அர்ச்சகர்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினார். பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, அலங்கார சேவை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story