தர்மபுரியில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரியில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி:
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் பணியில் ஈடுபடும் கர்நாடக அரசை கண்டித்து தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகில் மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட சட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பிரசாந்த், மாவட்ட இளைஞரணி செயலாளர் நவீன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் மனிலா, மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர் ரங்கசாமி, மாவட்ட துணை செயலாளர்கள் கிருஷ்ணன், சின்னசாமி, சேட்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சீனிவாசன் வரவேற்று பேசினார். கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் தவமணி கோரிக்கைகளை விளக்கி பேசினார். காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் முயற்சியை மத்திய அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும். தமிழகத்தின் உரிமையை பறிக்கும் கர்நாடக அரசின் இந்த முயற்சியை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தியும், கர்நாடக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர்கள் கந்தசாமி, சிவகுமார், மாவட்ட நிர்வாகி வசந்த ராஜ், ஒன்றிய நிர்வாகிகள் சண்முகம், தங்கவேல், கணேசன், சாமுவேல், மாதேஷ், மதன், நிர்மல் உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story