ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு குறித்து நடிகை மாளவிகா சர்ச்சை கருத்து


ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு குறித்து நடிகை மாளவிகா சர்ச்சை கருத்து
x
தினத்தந்தி 15 March 2022 10:06 PM IST (Updated: 15 March 2022 10:06 PM IST)
t-max-icont-min-icon

ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு குறித்து நடிகை மாளவிகா சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார்

பெங்களூரு:
ஹிஜாப் விவகாரத்தில் வெளியான தீர்ப்பு குறித்து பிரபல கன்னட மற்றும் தமிழ் பட நடிகை மாளவிகா அவினாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘அனைத்தும் பறிபோய்விட்டது. நாடகம் முடிந்தது. மீண்டும் அனைவரும் பள்ளிகளுக்கு செல்ல வேண்டும். மதிப்புமிக்க கர்நாடக ஐகோர்ட்டு முஸ்லிம் மதத்தில் ஹிஜாப் இன்றியமையாத அங்கம் இல்லை என்று கூறியிருக்கிறது. 

அரசியல் அமைப்பால் அனுமதிக்கப்பட்ட நியாயமான கட்டுப்பாடுகள், தற்போது கட்டுப்படுத்தப்படுகிறது. உத்தரவுகளை பிறப்பிக்க அரசுக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது. அனைத்து உரிமைகளும் நிராகரிக்கப்பட்டன’’ என்று கூறியுள்ளார். அவரது இந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் நேற்று வைரலானது. அதைப்பார்த்த பலரும் நடிகை மாளவிகா அவினாசுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். 

Next Story