வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 March 2022 10:06 PM IST (Updated: 15 March 2022 10:06 PM IST)
t-max-icont-min-icon

வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று மாலை திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பிரதான கிளை முன் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டுக்குழு மாவட்ட பொறுப்பாளர் மனோகரன் தலைமை தாங்கினார்.
ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். 5 நாட்கள் வங்கி வேலை வழங்க வேண்டும். முன்னாள் ராணுவ வீரர் ஊழியர்களுக்கு சம்பளத்தை சீரமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்க நிர்வாகிகள் விஜயானந்த், ராதாகிருஷ்ணன், முருகேசன் உள்ளிட்டவர்கள் பங்கேற்று கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.

Next Story