தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 March 2022 10:16 PM IST (Updated: 15 March 2022 10:16 PM IST)
t-max-icont-min-icon

மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து கடலூரில், தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடலூர், 

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், அதற்கு துணை போகும் மத்திய அரசை கண்டித்தும் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் கார் நிறுத்தம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில ஒழுங்கு நடவடிக்கைக்குழு தலைவர் திருமால்வளவன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆனந்த் வரவேற்றார். மாநில நிர்வாகக்குழு கண்ணன், மாணவரணி செயலாளர் அருள்பாபு, இளைஞரணி செந்தில்,  மகளிரணி துணை செயலாளர் அமராவதி, தலைமை நிலைய செயலாளர் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார், தலைவர்கள் சுரேந்தர், சுந்தர், வக்கீல் லெனின் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கோஷங்கள்

ஆர்ப்பாட்டத்தில் காவிரி நடுவர் மன்றம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி காவிரியில் அணை கட்ட தமிழக அரசு ஒப்புதல் தேவை எனும் நீதியை காற்றில் பறக்க விட்டு, மேகதாதுவில் அணை கட்ட ரூ.1000 கோடி நிதி ஒதுக்கிய கர்நாடக அரசையும், அதற்கு துணை போகும் மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், பாலமுருகன், ரிச்சட் தேவநாதன், மணி, நகர செயலாளர்கள் மணி, செந்தில், கார்த்திக், முருகானந்தம், நகர தலைவர்கள் சதீஷ், முத்துக்கிருஷ்ணன், மாவட்ட நிர்வாகிகள் சிலம்பரசன், துரை, தண்டபாணி, வக்கீல் சுந்தர்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் கமா என்ற கமலநாதன் நன்றி கூறினார்.

சிதம்பரம்

அதேபோல் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சிதம்பரம் தபால் நிலையம் முன்பு மாவட்ட செயலாளர் சேரலாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஆளவந்தான், தலைமை நிலைய பேச்சாளர்கள் திருச்சி அரவிந்தன், தங்க தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளம்புயல் பாசறை செயலாளர் கா.குமரன் கண்டன உரையாற்றினார். 

இதில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இளைஞரணி சிவபுரி சிவா, மாணவரணி ராம்ஜி, இளம் புயல் பாசறை சுரேஷ், நகர விவசாய சங்கம் அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் அன்பகம்.சுகுமார் நன்றி கூறினார்.

விருத்தாசலம்

கடலூர் மேற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் விருத்தாசலம் தலைமை தபால் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் அறிவழகன் தலைமை தாங்கினார். நகர செயலாளரும், கவுன்சிலருமான சேகர் வரவேற்றார். மாநில நிர்வாகிகள் தமிழ்செல்வன், வி.கே.முருகன், பாலமுருகன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். 

இதில் அருண்குமார், ஜெயராமன், கற்பகம், ஜெயா, ராஜன், ஒன்றிய செயலாளர்கள் சுரேந்தர், தங்கவேல், சங்கர், தியாகராஜன், சிலம்பரசன், செந்தாமரை, பன்னீர்செல்வம், தொகுதி செயலாளர் அருண்குமார், ஜோதி முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். முடிவில் கந்தசாமி நன்றி கூறினார்.

Next Story