அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 March 2022 10:18 PM IST (Updated: 15 March 2022 10:18 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

திண்டுக்கல்:
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவி தமிழ்செல்வி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்வ தனபாக்கியம் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அரியானா மாநிலத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் அங்கன்வாடி ஊழியர்கள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுப்பதை கண்டித்து கோஷமிட்டனர். இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள், அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story